சனி, 14 பிப்ரவரி, 2009
அத்வானி பேச்சு : ஒரு திருப்பம்
ஈழத் தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய பிரச்சனை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவரும் இனவாத சிறிலங்க அரசிற்கு ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் லால் கிஷண் அத்வானி, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித அக்கறையும் காட்டாமல் பொறுப்பின்றி செயல்பட்டு வருகிறது என்று கூறியிருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறிலங்க அரசை எவ்வித நிர்பந்தத்திற்கும் உட்படுத்தாத ஒரு மேம்போக்கான நிலையை கடைபிடித்துக் கொண்டு, ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை, பயங்கரவாததிற்கு எதிரான அந்நாட்டு அரசின் இராணுவ நடவடிக்கைதான் என்ற ஏமாற்று நிலைப்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதற்கு உதவியும் செய்து கொண்டு, அப்படிப்பட்ட (இராணுவ) உதவிகள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத்தான் என்று தமிழக மக்களை ஏமாற்றி வரும் நிலையில், தமிழர்கள் கவலைப்படும் ஒரு பிரச்சனை இந்தியா கவலைப்பட வேண்டிய ஒரு பிரச்சனைதான் என்று அத்வானி அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பது, குறுகிய எதிர்காலத்தில் ஈழம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் ஒரு தலைகீழ் மாற்றம் வரவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இலங்கையில் அப்பாவி மக்களைக் குறிவைத்து சிறிலங்க இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், “அது அந்நாட்டு உள்நாட்டுப் பிரச்சனை, அதில் ஒரு அளவிற்குத்தான் மத்திய அரசு தலையிட முடியும்” என்று தனது கூட்டணிக் கட்சியும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியுமான தி.மு.க.வை பேச வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அத்வானியின் பேச்சு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனனும், பிறகு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் பேசியபோது கூட, போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிறிலங்க அரசிடமே, அவர்களைப்பாதுகாக்கும் பொறுப்பை அளித்து, அதற்கான ‘உறுதிமொழியை’ பெற்று வந்துள்ளதாக கூறி ஒரு பெரிய கேலிக் கூத்தையே அரங்கேற்றியதால் மத்திய அரசு மீது தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட கோபக் கொந்தளிப்பு பல்வேறு வகையிலும் போராட்டங்களாக வெடித்துவரும் நிலையில், தமிழர்களோடும், தமிழ்நாட்டு மக்களோடும் நாங்கள் நிற்கின்றோம் என்று அத்வானி கூறியிப்பது ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“இலங்கையில் கடந்த 23 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் பெற்ற வெற்றிகள் தமிழர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை உருவாக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது” என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மறுகுரலாகவே ஒரு அறிக்கையை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து) வெளியிட்டார்.
இதற்கு நேர் மாறாக, இலங்கை இனச் சிக்கலிற்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆயுதத்தைக் காட்டி ஈழத் தமிழர்களை ஒடுக்க முற்படக்கூடாது என்றும் அத்வானி கூறியிருப்பது இலங்கை தொடர்பான இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடு நீடிக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகிறது.
ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திவரும் இனப்படுகொலையை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான போர் என்று ராஜபக்சவின் நிலையை ஏற்றுக் கொண்டு, அந்த நிலையை ஆதரிக்கிறது மன்மோகன் சிங் அரசு. அதற்கு நேர் மாறாக, அது இனச் சிக்கலே என்றும், இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வைத் தராது என்றும் அத்வானி கூறியிருக்கிறார். இது தமிழர்ளையும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளையும் சிந்திக்கத் தூண்டும் நேர் எதிர் நிலைகளாகும்.அதுமட்டுமல்ல, இலங்கை இனப் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்பதிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிப்படையான ஆதரவாளருமான வைகோவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அத்வானி பேசியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
அத்வானி மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தோழமைக் கட்சியான பிஜூ ஜனதா தள உறுப்பினர் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பேசியதை விட அவர் பேசியது அழுத்தம் திருத்தமாக இருந்தது.
பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் ரீதியான முக்கியத்துவத்தையும் பெறுகிறது.
மக்களவைக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் கூட்டணிகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இலங்கைத் தமிழர் பிரச்சனையும், தமிழக மீனவர் பிரச்சனையும் அமையும் சாத்தியக் கூறுகள் அத்வானியின் பேச்சைத் தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.
வெள்ளி, 6 பிப்ரவரி, 2009
ஈழத் தமிழர், மீனவர் பிரச்சனைகள் அரசியலாகட்டும்
சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலிலும், விமானப்படையின் தொடர் குண்டு வீச்சிலும் நாளும் அழிந்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தை காப்பாற்ற போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசினால் மட்டுமின்றி, மாநில அரசினாலும் கைவிடப்பட்டதால் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ள கொதிப்பு மாநிலத்தின் அரசியல் போக்கில் பிரதிபலிக்கும் என்ற கருத்து வேகமாக பலம் பெற்று வருகிறது.
ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யுமாறு மத்திய அரசு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சேர எழுந்த குரல், சட்டப் பேரவையில் தீர்மானங்களாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழர்களின் எண்ணங்களை - ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை - வெளிப்படுத்த உண்ணாவிரதம், மனித சங்கிலி, மறியல், மாநாடு என்று ஜனநாயக ரீதியான எல்லா வழிகளிலும் வற்புறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த எழுச்சி சிறிலங்க அரசை அச்சத்திற்குள்ளாக்கியது. தமிழர்கள் மீதான தாக்குதலின் வேகம் குறைந்தது. அந்த நிலையில்தான் சிறிலங்க அதிபரின் ஆலோசகர் ஃபசில் ராஜபக்ச டெல்லி வந்து பிரதமரையும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினார். அப்போது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, சிறிலங்க கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் உத்தரவாதம் பெறப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், பசில் ராஜபக்ச சிறிலங்கா திரும்பியதும், அதுவரை நிறுத்தப்பட்டிருந்து சிறிலங்க விமானப்படைத் தாக்குதல் மீண்டும் தொடரப்பட்டது, முன்பை விட தீவிரமாக. அதன் பிறகு, இதுநாள் வரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சகட்டுமேனிக்கு காட்டுமிராண்டித்தனமாக ஈழத் தமிழர்கள் மீது இனவெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது சிறிலங்க அரசுப் படைகள்.
போரை நிறுத்து என்று மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் இருந்தும், மக்கள் மன்றத்திலிருந்தும், போராட்டங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் யாவும் மத்திய அரசால், பிரதமர் மன்மோகன் சிங்கால் கண்டுகொள்ளப்படவில்லை.
பிரதமருடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நடத்திய சந்திப்பும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
தைத் திங்கள் பிறப்பும், பொங்கல் பண்டிகையும் ஒரு சோக நிகழ்வுகளாக தமிழ்நாட்டில் ஆன நிலையில், இலங்கைக்குப் பயணம் செய்த அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன், போர் நிறுத்தம் பற்றி பேசாதது மட்டுமல்ல, தமிழர்கள் வன்மையாக கண்டித்துக் கொண்டிருக்கும் சிறிலங்க அரசுடன் ‘ஒரு இணக்கமான, ஆழமான, இதமான உறவு ஏற்பட்டுள்ளது’ என்று அறிவித்தது, அவருடைய பயண நோக்கத்தையே சந்தேகிக்க வைத்தது.
ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரச படைகள் நடத்தும் இனவெறித் தாக்குதலை இந்தியா ‘மெளனமாக’ ஆமோதிக்கிறதா? என்று சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே ராடார் உதவி, பிறகு இந்திய அயல் உளவு அமைப்பான ‘ரா’ விமானம் பறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவற்றால் எழுந்த அந்த சந்தேகம், சிவ் சங்கர் மேனனின் பயணத்தாலும், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாலும் பலப்பட்டது.
அவருடைய பயணத்தால் ஏற்பட்ட கோபம்தான் சட்டப்பேரவையில் ‘அய்யகோ’ என்று துவங்கும் போர் நிறுத்தத்தை வலியுறுத்த நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம். இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு, தமிழக முதல்வருக்கு ‘தெரியப்படுத்திவிட்டு’ இலங்கை சென்ற பிரணாப் முகர்ஜி, சிறிலங்க அதிபர் ராஜபக்ச, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா ஆகியோரைச் சந்தித்துவிட்டு ஒரே நாளில் நாடு திரும்பினார்.
போர் நிறுத்தம் பற்றிப் பேசியிருப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயலுறவு அமைச்சகமும், பிரணாப் முகர்ஜியும் விடுத்த அறிக்கைகள் உலகத் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது மட்டுமின்றி, தமிழனைத் தாண்டி சிறிலங்க அரசுடன் ‘ஒரு நல்லுறவை’ இந்திய அரசு கொண்டுள்ளதும், தமிழர்கள் பிரச்சனையில் சிறிலங்க அரசு வகுத்துள்ள ‘திட்டத்தை’ எவ்வித எதிர்ப்புமின்றி இந்திய அரசு ஏற்றுக்கொண்டு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதும் தெரிந்ததும் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது.
அதற்கு வடிகாலாகவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த பரவலான ஆதரவாகும். புதன்கிழமை நடந்த வேலை நிறுத்தம் மத்திய அரசிற்கு மட்டுமின்றி, தமிழக அரசிற்கும் ஒரு தெளிவான செய்தியைத் தந்துள்ளது. அது, நாளும் கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் நலன் காக்க எல்லா அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி தமிழர்கள் ஒன்றிணைவோம் என்பதே.
தமிழக மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் திகழும் முதல் மூன்று கட்சிகளாகக் கருதப்படும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகியவற்றின் எதிர்ப்பு மற்றும் ஒத்துழையாமையைத் தாண்டி, இந்த வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை அரசியல் தலைமைகளைச் சார்ந்தே தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழக மக்கள், அந்தத் தலைமைகளின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும், உணர்வு ரீதியாக ஒன்றிணைந்த நின்றது, இதற்குமேல் அரசியல் ரீதியான ஒரு மாற்றத்திற்கு முதல் திறவாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை பல காலகட்டங்களில் பலமாக எதிரொலித்தாலும், அது என்றைக்குமே அரசியல் பிரச்சனையாக - அதாவது தேர்தல் பிரச்சனையாக - ஆக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் யாவும், அது மக்களவைத் தேர்தலாகட்டும், மாநிலங்களவைத் தேர்தலாகட்டும், தமிழ்நாட்டின் பிரச்சனை மற்றும் கொள்கை ரீதியான அடிப்படைகளில்தான் நடந்துள்ளது.
ஈழத் தமிழரின் நலம் இதுநாள்வரை புறக்கணிக்கப்பட்டதற்குக் கூட இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் இம்முறை, தாங்கள் சார்ந்த கூட்டணியை விட்டு விலகி தமிழின உணர்வு ரீதியாக - தமிழக மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் விதமாக - தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தது இதுவே முதல் முறை. அவ்வாறு ஒன்றிணைந்து நடத்திய மக்கள் இயக்கம், ஆளும் கட்சியின் கடும் எதிர் வேலைகளுக்கு இடையிலும், முக்கிய எதிர்க்கட்சியின் பங்கேற்பு இல்லாத நிலையிலும், பெரும் வெற்றி பெற்றுள்ளதென்றால், தமிழின உணர்வு தமிழ்நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைப் போக்கையும் மாற்றியுள்ளது என்பதேயே காட்டுகிறது.
(இதனை நன்கு உணர்ந்ததால்தான், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடந்த கடையடைப்புக்கு தன்னால் இயன்ற எதிர்ப்பை வெளிப்படுத்திய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களை தனது ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கான சதி என்றே குறிப்பிடுகிறார்)
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுவரை கடைபிடிக்கப்பட்ட சாத்வீக வழிமுறைகள் எதுவும் எந்தப் பலனும் அளிக்காத நிலையில், அதனை அரசியலாக்குவதே அவர்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களின் விடுதலையை உறுதிப்படுவதற்கும் உரிய பலத்தை தமிழர்களுக்கு அளிக்கும்.
இதில் மற்றொரு முக்கிய பிரச்சனையும் அடங்கியுள்ளது. அதுவே தமிழ்நாட்டின் மீனவர்களின் பாதுகாப்பு. ‘இதற்குமேல் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது, சிறிலங்க கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள்’ என்று பிரணாப் முகர்ஜியும், பசில் ராஜபக்சவும் விடுத்த கூட்டறிக்கையில் மட்டுமின்றி, அதிபர் ராஜபக்ச அளித்த உறுதி மொழியும் காற்றில் பறந்துவிட்டது. எனவே சிங்கள கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் கச்சத் தீவு தமிழர் கைக்கு வந்தாக வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த ஒரே வழி, ஈழப் பிரச்சனையுடன் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய உரிமை மீட்பையும் இணைத்துப் பார்ப்பதே ஒரே வழியாகும்.
ஆக, ஈழத் தமிழர் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திர வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யவும், அதோடு தமிழக மீனவர்களை காப்பாற்றவும், அவர்களின் மீன்பிடி உரிமையை மீண்டும் நிலைநிறுத்தவும் ஒரே வழி: இவ்விரு பிரச்சனைகளையும் தேர்தல் அரசியல் ஆக்குவதே.
தமிழ்நாட்டின் அரசியல் தமிழ் இன உணர்வுடன் கூடிய உரிமைகளை மீட்பதை இலக்காக கொண்ட அரசியல் கட்சிகளாகவும், அதனை தங்களின் வசதியான அரசியலிற்காக மறுக்கும் கட்சிகள் என்றும் பிளவுபடட்டும். இப்படிப்பட்ட பிளவே இந்திய அரசியலிற்கு தமிழகத்திலிருந்து ஒரு சரியான சமிக்ஞையை விடுக்கும். தேச அளவிலான கட்சிகள் தமிழின உணர்வையும், உரிமையையும் காப்பாற்றுவதற்கும் மதிப்பதற்கும் இந்த வழி அரசியலே வழி வகுக்கும்.
இப்படிப்பட்ட அரசியல் வழியே, தமிழர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் தங்களின் அரசியலிற்காக அந்நாட்டிற்கு பேரமாக்கும் காங்கிரஸைப் போன்ற கட்சிகளை ஒழித்துக் கட்ட உதவும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)